தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைதுறை பாலைவனநாதர் கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றது. செயல் அலுவலர் விக்னேஷ் தலைமை வைத்து பணிகளை தொடக்கி வைத்தார். புதுச்சேரியில் இருந்து 50 சிவனடியார்கள் வருகை புரிந்து கோயிலில் படர்ந்து கிடந்த செடி, கொடிகள் மற்றும் முட்புதர்கள் முற்றிலும் அகற்றி உழவாரப்பணி மேற்கொண்டனர். பின்னர் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் கோயில் ஆய்வாளர் லட்சுமி, கோயில் எழுத்தர் சங்கரமூர்த்தி, பேரூராட்சி கவுன்சிலர் புஷ்பா சக்திவேல், சமூக ஆர்வலர்கள் பாலாஜி, ராஜாராமன், சீனிவாசன் மற்றும் சிவனடியார்கள், திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.