திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அழகேசன் இவரது மகன் மோகன் வயது (34) இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிச்சை ரத்தினம் குடும்பத்தாருக்கும் இடையே ஏற்கனவே இட பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதில் ஏற்கனவே மோகன் உறவினர் ஜெயபால் என்பவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தளபதி குடும்பத்தினர் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
இந்த நிலையில் குடிபோதையில் மோகன், பிச்சை ரத்தினம் மருமகள் அர்ச்சனா வீட்டில் இருந்த பொழுது குடிபோதையில் திட்டியதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக அர்ச்சனா திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் மோகன் மற்றும் அர்ச்சனா ஆகியோரை வரவழைத்து விசாரணை செய்ததோடு இச்சம்பவம் குறித்து மறுநாள் விசாரணைக்கு வருமாறு அனுப்பி உள்ளனர்.
இந்த நிலையில் பிச்சை ரத்தினம் மகன்கள் ரவுடி தளபதி (34), ரவுடி ரகுபதி (எ)பிரபாகரன் (31), சீனிவாசன் மகன் ரவுடி சுந்தர்ராஜ் (36) சர்க்கார் பாளையத்தை சேர்ந்த தமிழன் மகன் குமரகுரு (32), சர்க்கார் பாளையத்தை சேர்ந்த யோக சந்தர் தாஸ் மகன் கார்த்திக் குமார் (28)ஆகிய 5 பேரும் சேர்ந்து மோகன் அவரது மனைவி பூவரசி மற்றும் ஒருவர் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை அறிவாளால் வெட்ட துரத்தியுள்ளனர் அப்பொழுது அவர்களிடம் மோகன் மட்டும் சிக்கிக் கொண்டுள்ளார் அவரை 5 பேரும் சேர்ந்து சரமாரியாக வெட்டி உள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த மோகன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தளபதி குமரகுரு ஆகிய இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் சுந்தர்ராஜ், ரகுபதி, கார்த்திக் குமார் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.