நடிகர் அஜித் -ஷாலினி தம்பதியின் மகன் ஆத்விக் பிறந்தநாள் கடந்த மார்ச் 2-ம் தேதி கொண்டாடப்பட்டது. அந்தப் போட்டோக்களை ஷாலினி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும் உண்டு. அனோஷ்கா- ஆத்விக் இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். 9 வயதாகும் ஆத்விக் விளையாட்டில் படுசுட்டி. குறிப்பாக கால்பந்து விளையாட்டில் ஆர்வமாக இருக்கிறார். இவரது இந்த விளையாட்டுத் திறமையை அஜித்-ஷாலினி ஊக்குவித்து வருகின்றனர்.
போட்டிகளில் ஆத்விக்கை கலந்து கொள்ள வைப்பது, பள்ளியில் அவருடைய நண்பர்களுடன் அஜித் கால்பந்து விளையாடி மகிழ்வது போன்ற புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். சென்னை கால்பந்து கிளப்பின் ஜுனியர் அணிக்காக விளையாடி வருகிறார் ஆத்விக் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஃபுட்பால் தீமில் ஆத்விக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு திட்டமிட்டு மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறார்கள் அஜித் -ஷாலினி ரசிகர்களும் ஆத்விக்கிற்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைச் சொல்லி வருகின்றனர்.