திருச்சி, மாநகர காவல்துறை அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வயலூர் சாலையில் உய்யக்கொண்டான் திருமலை மற்றும் ரெட்டை வாய்க்கால் இடைப்பட்ட பகுதியில் சோதனைச்சாவடி (எண் 8) செயல்பட்டு வந்தது. சாலை விரிவாக்கப்பணிகளையொட்டி அங்கு புதிதாக சோதனைச்சாவடி மற்றும் கட்டடம் அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில் சோதனைச் சாவடியை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தொடங்கி வைத்தார். இந்த சோதனை சாவடியில் வயலூர் ரோடு வழியாக திருச்சி மாநகருக்குள் வரும் மற்றும் மாநகரிலிருந்து வெளியேறும் வாகனங்களை பதிவு செய்யும் விதமாக 2 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் எந்த ஒரு தகவலையும் உடனடியாக தெரிவிக்கும் வகையில் நவீன தொடர்பு சாதனங்களும் அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் துணை ஆணையர்கள் அன்பு மற்றும் செல்வக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.