Skip to content
Home » பொங்கல் வைக்க உகந்த நேரம் எது?…

பொங்கல் வைக்க உகந்த நேரம் எது?…

நமது வாழ்நாளில் பயிர்களின் செழிப்பான வளர்ச்சிக்கு உதவி புரிந்த சூரியனுக்கும், உழவுக்கு உதவி செய்த மாடுகளுக்கும் ஒரு நாளில் நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுவது தான் பொங்கல் பண்டிகை.  ஆடி மாதத்தில் பயிர் செய்த பயிர்களை அறுவடை செய்து, அந்த புதிய நெற்கதிர்கள் மூலம் பெறப்பட்ட அரிசியை தமிழர் திருநாளான தை முதல் நாளில் புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய கடவுளுக்கு படைத்தது தமிழ் மக்கள் வழிபடுவார்கள்.  முதல் நாள் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த பொங்கல்

பொங்கல் வைக்க நல்ல நேரம் எது தெரியுமா...?

கொண்டாடப்படும். இந்த பொங்கல் பண்டிகை காலங்களில் மண்பானைகள், பித்தளை பொங்கல் பானைகள், அடுப்புகள், மஞ்சள் கொத்துகள், கரும்புகள் போன்றவற்றின் விற்பனை களைகட்ட தொடங்கிவிடும்.  வெளியூர்களில் வசிப்பவர்கள் இந்த நன்னாளில் தங்கள் இல்லங்களுக்கு வந்து மகிழ்ச்சியுடன் பண்டிகையை கொண்டாடுவார்கள்.

இந்த 2023ம் ஆண்டில் ஜனவரி 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று பொங்கல் பண்டிகை வருகிறது, இன்றைய தினம் போகி பண்டிகை.  பழையன கழிதலும், புதியன புகுதலும் என்கிற பழமொழிக்கேற்ப இன்று மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலுள்ள பழைய பொருட்களை தீமையை எரிப்பதற்கு கருதி தீயிலிட்டு எரிப்பார்கள்.  இன்னும் பொங்கல் கொண்டாட சில மணி நேரங்கள் இருக்கிறது, பொங்கல் பண்டிகையை கொண்டாட தயாராகிவிட்ட நமக்கு எப்போது பொங்கல் வைக்க வேண்டும் என்கிற யோசனை இருக்கும்.  நாளைய தினம் பொங்கல் வைக்க உகந்த நேரம் எது என்பதை நாங்கள் இங்கு உங்களுக்கு சொல்கிறோம், பொங்கல் வைக்க சரியான நேரம் – காலை 07.45 முதல் 08.45 வரை.  வெளிநாடுகளில் இருப்பவர்கள் மற்றும்  காலையில் பொங்கல் வைக்க முடியாதவர்கள் பகல் 1.30 முதல் 02.30 வரையிலும், மாலை 03.30 முதல் 04.30 வரையிலும் பொங்கல் வைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.  இன்னும் சில நேரங்களை பற்றி பார்ப்போம்.

நல்ல நேரம் – காலை 07.30 மணி முதல் 08.30 வரை
மாலை 03.30 முதல் 04.30 வரை

எமகண்டம் – பகல் 12 முதல் 01.30 வரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!