கரூர் மாவட்டம், காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காந்திகிராமம் பகுதியில் மாற்றிய ரேஷன் கடையை அதே இடத்தில் அமைக்க கோரி ஒருங்கிணைந்த கூட்டுறவு துறை அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவதுகரூர் மாவட்டம் காந்திகிராமம் பகுதியில் 35 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருவதாகவும், இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளது இதில் கிருஷ்ணா நகர்,
திரு வி கா சாலை, ஜி கே நகர், முத்து நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் மருத்துவக் கல்லூரி எதிர் புறம் அமைந்துள்ள பொதுமக்கள் பயனடைந்து வந்தனர்.
இந்த நிலையில், தற்போது பொது மக்களிடம் எந்த ஒரு முன் அறிவிப்பும் தெரிவிக்காமல் நியாய விலை கடையை இரண்டு கிலோமீட்டர் தொலைவில் வேறு இடத்திற்கு மாற்றி உள்ளனர் இதனால் பொதுமக்கள் அவதி அடைவதாகவும், மேலும் ரேஷன் கடையை மீண்டும் பழைய இடத்திலேயே அமைக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த கூட்டுறவு துறை அலுவலர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர்.