Skip to content

அரியலூரில் கலெக்டர் தலைமையில் குறைதீர் நாள் கூட்டம்..

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 412 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

முன்னதாக நில அளவைத்துறையில் பொதுமக்கள் அளித்த மனுக்களின் மீது விரைவாக நடவடிக்கை மேற்கொண்ட 20 நிள அளவையர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார்.

பின்னர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் பிற்படுத்தபட்டோர் வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினை சேர்ந்த 40 பயனாளிகளுக்கு தலா ரூ.5,268 மதிப்பில் என மொத்தம் ரூ.2,10,720 மதிப்பிலான தையல் இயந்திரங்களையும், 41 சிறுபான்மையினர் பயனாளிகளுக்கு தலா

ரூ.5030 மதிப்பில் என மொத்தம் ரூ.2,06,230 மதிப்பில் மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்களையும், 06 பயனாளிகளுக்கு தலா ரூ.6,552 மதிப்பில் என மொத்தம் ரூ.39,312 மதிப்பிலான பித்தளை தேய்ப்பு பெட்டிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் உமா மகேஸ்வரன் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!