தமிழில் 1949-ம் ஆண்டு ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த ‘வாழ்க்கை’ படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர், வைஜெயந்தி மாலா. ‘இரும்புத்திரை’, ‘பார்த்திபன் கனவு’, வஞ்சிக்கோட்டை வாலிபன் தேன் நிலவு உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர். தற்போது வைஜெயந்தி மாலாவுக்கு 90 வயதாகிறது. இவர் எம்.பியாகவும் பதவி வகித்தவர்.
தற்போது அயோத்தி ராமர்கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்குப் பிறகு பாலிவுட் நட்சத்திரங்கள் உட்பட பல கலைஞர்கள் ‘ராக் சேவா’ என்ற இசை நிகழ்ச்சிகளை அங்கு வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் 90 வயதாகும் வைஜெயந்திமாலாவும் சமீபத்தில் அயோத்தியில் பரதநாட்டியம் ஆடினார். 90 வயதாகும் நடனக் கலைஞரின் நடனத்தைக் கண்டு ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். அவரது பரதநாட்டிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.