பாராளுமன்ற தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 195 பேர் கொண்ட முதலாவது வேட்பாளர் பட்டியலை இன்று பாஜ வெளியிட்டது. 28 பெண்களை கொண்ட இந்த பட்டியலில் தமிழக வேட்பாளர்களின் இடம் பெறவில்லை. மற்றபடி உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், கேரளம் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போதைய மத்திய அமைச்சர்கள் 34 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வாரணாசியிலும், அமித்ஷா காந்தி நகரிலும், போட்டியிடுகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் கோட்டோ தொகுதியில் சபாநாயகர் ஓம் பிர்லா, அமேதி தொகுதியில் ஸ்மிதி ராணியும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சூரி ஸ்வராஜ் டில்லியில் போட்டிடுகிறார். கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ்கோபியும் பத்தனதிட்டாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே அந்தோணியின் மகனும் போட்டியிடுகின்றனர்.