வருகிற பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு மக்கள் தேர்தல் அறிக்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் தமிழ்நாடு சார்பில் தயாரித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: பாராளுமன்றத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இருக்கிறது.
தேர்தல்களின் மூலம் தேர்வு செய்யும் தேர்வு முறை மக்களுக்கும் நாட்டிற்கும் உண்மையில் பயனளிக்க வேண்டும் என்றால் அத்தகைய வேட்பாளர்களை கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.நாட்டின் தனித்தன்மைகளோடு பரந்து விரிந்து கிடக்கும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்தி நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல துடிக்கும் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.அவ்வாறு புதிதாக தேர்வு செய்யப்பட இருக்கிற ஒன்றிய அரசுக்கு நாட்டின் தற்போதைய அரசியல் சமூக பொருளாதார சூழ்நிலையை
பொருத்தும், பொதுமக்களின்கருத்துகளை இந்த தேர்தல் அறிக்கையில்:நாட்டு மக்கள் அனைவருக்கும் அனைத்து அடிப்படை உரிமைகள் கிடைக்கச் செய்யும் மக்கள் நலன் சார்ந்த புதிய அரசு அமைய வேண்டும்.சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோர்க்கு பாதுகாப்பு கிடைக்கும் தேவையான சட்டங்களை இயற்றி, நடப்பில் உள்ள சட்டங்களை திருத்தம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேளாண்துறை புத்துயிரூட்டும் வண்ணம் ஒருங்கிணைந்த திட்டம் வகுத்து நடைமுறைப்படுத்தபட வேண்டும்.சிறூபான்மையினருக்குகல்வி, வேலை வாய்ப்பில் 15 சதவீதம் இடஒதுக்கீடு மற்றும் மொழி பாதுகாப்பு , அதிகார பங்கீடு வழங்க வேண்டும்.என்று கூறினார்.பேட்டியின் போது:ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில செயலாளர் முஹம்மது காசிம், மண்டல அமைப்பாளர் சையது முஹம்மது, செய்தி தொடர்பாளர் நவாஸ் கான், சாலிடாரிட்டி தமிழக மாநில இளைஞர் தலைவர் கமாலுதீன் ஆகியோர் உடனிருந்தனர்.