அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே செங்குழி மலைமேடு பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் சுந்தரராஜன் (46) விவசாயியான இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு உடையார்பாளையம் அருகேயுள்ள மணகெதி காலனி தெருவை சேர்ந்த விக்னேஷ்( 27) மற்றும் அவரது உறவினர்களான செங்குட்டுவன்,தினேஷ்குமார், ராஜ்குமார், அருள் செல்வம், சுமித்ராதேவி, ஹரிணி ஆகிய 7 பேரிடமும், இந்து சமய அறநிலையத்துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூபாய் 5 லட்சத்து 2 ஆயிரம் ரொக்க பணத்தை பெற்றதாகவும், பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர் யாருக்கும் வேலை வாங்கித் தரவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் பணம் கொடுத்து ஏமாந்த 7 பேரும், சுந்தர்ராஜிடம் கேட்டபோது அவர் பணத்தை திருப்பி தராமல், அவர்களை ஏமாற்றியதாவும் தெரிகிறது. பின்னர் இது குறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் விக்னேஷ் புகார் அளித்தார். பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் சுந்தரராஜை கைது செய்து, ஜெயங்கொண்டம் சிறையில் அடைத்தனர்.
அரசு வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி… விவசாயி கைது..
- by Authour
