Skip to content

விளம்பரம் பார்த்தால் வருமானம் என மோசடி… யூடியூப் சேனல் உரிமையாளர் கைது…

கோவையைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் MY V3 ADS நிறுவனம், செல்போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் வருமானம் ஈட்டலாம் என ஆசைக்காட்டி பொதுமக்களிடம் பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த நிறுவனத்துடன் தொடர்பில் இருந்த வி 3 யூடியூப் சேனல் உரிமையாளர் விஜயராகவன் மீது மோசடி புகார் எழுந்தது.

மேலும் ரூ.18,000 முதலீடு செய்தால் மாதம் ரூ.76,000 லாபம் கிடைக்கும் என பலரை ஏமாற்றியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன் தனது நிறுவனம் நேர்மையானது என மத்திய அரசு சான்றளித்தது போல் போலி ஆவணம் தயாரித்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது.

மதுரை தனக்கன்குளத்தைச் சேர்ந்த விஜயராகவனை கோவை மாவட்ட பொருளாதாக்குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரை விசாரணைக்கு போலீசார் அழைத்த போது திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதையடுத்து மதுரை உத்தங்குடியில் தனியார் ஆஸ்பத்திரியில் அவரை போலீசார் அனுமதித்தனர். இந்த தகவல் அறிந்த இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த 200-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரி முன்பு நள்ளிரவில் இருந்து குவிந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!