அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.. இதுகுறித்து தனது டிவிட்டரில் நடிகை காயத்ரி ரகுராம் … என் தொழிலைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெயரைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெண்மையை அவமானப்படுத்தியதற்கு நன்றி, என்னை மானபங்கம் செய்ததற்கு நன்றி, என் 8 வருட சேவை, கடின உழைப்பு மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டதற்கு நன்றி, எல்லாவற்றையும் பறித்த பிறகு என்னை தூக்கி எறிந்ததற்கு ஒரு பெரிய நன்றி.
என்னால் திரும்பக் கொண்டு வர முடியாத இளமைக் காலத்தை பறித்ததற்கு நன்றி, என் தனிப்பட்ட வாழ்க்கையை பறித்ததற்கு நன்றி, பாதுகாப்பை தராததற்கு நன்றி, எனக்கு துரோகம் செய்த பாஜவுக்கு நன்றி, நீதி வழங்காததற்கு மிக்க நன்றி. கடவுள் உங்களை பார்த்துக் கொள்வார். நீங்கள் அனைவரும் என்னிடம் செய்தது தவறு என்பதை தமிழ்நாடு மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள். நான் தர்மத்தை நிலைநாட்டுவேன். விரைவில் களத்தில் சந்திப்போம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘‘ஆபாச பேச்சாளரின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை. ஒரு பெண்ணைப் பற்றி தவறாகப் பேசும் ஒரு தலைவருக்கு இசட் வகை பாதுகாப்பு.
ராஜினாமா செய்ய சரியான முடிவை எடுத்தேன். பெண்கள் பாதுகாப்பு சூப்பர். நன்றி மோடி ஜி. நான் உங்களை அப்பாவாக பார்த்தேன். அரசியல் ஜோக்கருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு – மக்களின் பணத்தில் இருந்து. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்தரியில் குடை பிடிப்பான் என பதிவிட்டுள்ளார்.. இந்த டிவிட்டர் வெளியிடப்பட்ட சில நிமிடங்களில் அவரை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கிவிட்டதாக பாஜ தமிழக தலைமை அறிவித்துள்ளது.