தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சில் முதல் முறையாக நிதி திரட்டுவதற்காக ஒரு கோடைகால கண்காட்சியை சரங் என்ற பெயரில் நடத்துகிறது. கோடை கால மாதங்களில் அணிந்தும் மகிழும் வகையிலான ஆயத்த ஆடைகள் மற்றும் பிற பொருட்களை இடம் பெற்றுள்ளன. இன்றும் (மார்ச் 01) நாளையும் மார்ச் 2-ம் ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி கோவை சிங்காநல்லூர் பகுதி பெர்க்ஸ் பள்ளி ஆர்ச் ரோடு பகுதியில் அமைந்துள்ள விஸ்பரிங் ஸ்டோன்ஸ் வளாகத்தில் நடைபெறுகின்றது. துவக்க விழாவிற்கு கோயம்பத்தூர், வருமான வரி துறையின், உதவி ஆணையாளர் திருமதி. பிரையடி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கண்காட்சியை துவக்கிவைத்தார்.நாடு முழுவதும் உள்ள பல்வேறு கைவினைஞர்கள் தயாரிப்பிலான பொருட்களும் உள்ளன. இளைய தலைமுறையினர், கவனமுடன் தயாரித்த, நிலையான வேலைப்பாடுகள் கொண்ட புதுமையான வடிவமைப்பிலான ஆடைகள் அதிக அளவில் காட்சியில் இடம் பெறுகின்றன.பல்வேறு விதமான வீட்டு அலங்கார பொருட்கள், நகைகள் விற்பனையில் உள்ளன. பசியோடு வரும் வாடிக்கையாளர்களுக்கு சுவையான உணவளிக்க கொங்கு நாட்டு சமையல், சுஷி, சாலட் பவுல், சாக்லேட், பட்டிசெரியே, ஜூஸ், சான்ட்விச், ஐஸ்க்ரீம் மற்றும் உள்ளுர் சுவையான சிற்றுண்டிகளும் இடம் பெறுகின்றன.