தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று 71வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அனைத்து கட்சித்தலைவர்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இன்று காலை முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை அவரது வீட்டில் குடும்பத்தினர் கொண்டாடினர்.
ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகியோருக்கு மாலை அணிவித்து குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அவர்களிடம் ஆசி பெற்றனர். அதைத்தொடர்ந்து பெரிய கேக்கை ஸ்டாலின் வெட்டினார். முதல் துண்டை எடுத்து மகனும், அமைச்சருமான உதயநிதிக்கு ஊட்டினார். இந்த நிகழ்ச்சி்யில் உதயநிதியின் மனைவி கிருத்திகா, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் மற்றும் பேரக்குழந்தைகள், சகோதரி செல்வி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.