முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகிறார். அவர் இன்று காலை சிஐடி நகரில் உள்ள தங்கை கனிமொழி இல்லத்துக்கு சென்றார். அங்கு கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருக்கு கனிமொழியின் தாயார் பொன்னாடை அணிவித்து
வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கனிமொழியின் கணவர் அரவிந்தனும் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கி உள்ள நடிகர் விஜய், தனது எக்ஸ் தளத்தில், முதல்வர் ஸ்டாலினுக்கு இனி பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். முதல்வர் பிறந்தநாளையொட்டி நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது.