திருச்சியில் இன்று 30, 003 மாணவ மாணவியர் பிளஸ் டூ தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் இன்று முதல் பிளஸ் டூ பொதுத்தேர்வு தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்வி மாவட்டங்களை சேர்த்து 130 தேர்வு மையங்களில் 13 ஆயிரத்து 63 மாணவர்களும், 16,400 மாணவிகளும் என மொத்தம் 30 ஆயிரத்து மூன்று பேர் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.
மேலும் திருச்சி மத்திய சிறையில் 9 பேர் பிளஸ் டூ தேர்வு எழுதுகின்றனர். இந்த பிளஸ் டூ தேர்வு இன்று தொடங்கி
வருகிற மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் திருச்சி இ ஆர் மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை பிளஸ் டூ தேர்வு எழுதுவதற்காக வந்த மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதும் அறையை ஆர்வமுடன் தேர்வு செய்தனர். மேலும் இதேபோல் கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி வளாகத்தில் இருந்த கல்வி கடவுளான சரஸ்வதியை வணங்கினர். மாணவிகள் பிளஸ் டூ தேர்வு எழுதினர். திருச்சி மாவட்டத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வு எழுதும் பள்ளிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பிளஸ் டூ பொதுத் தேர்வை 250 பறக்கும் படையினர் கண்காணித்து வருகின்றனர்.