Skip to content
Home » இமாச்சல் காங். அரசை கவிழ்க்க சதி…. மேலிட தலைவர்கள் விரைவு

இமாச்சல் காங். அரசை கவிழ்க்க சதி…. மேலிட தலைவர்கள் விரைவு

  • by Senthil

இமாச்சலப் பிரதேசத்தில்  காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு  ஒரே ஒரு இடத்திற்கு  நேற்று நடைபெற்ற மாநிலங்களவை எம்.பி. தேர்தலில்  காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் போட்டியிட்டன. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தும் காங்கிரஸ் வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் 6 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்ததால்  பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட ஜெய்ராம் தாக்கூர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

“கட்சி மாறி வாக்களித்த 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சி.ஆர்.பி.எப். வீரர்களும், ஹரியானா மாநில போலீசாரும் சேர்ந்து வாகனத்தில் கடத்திச் சென்று ஹரியானா மாநிலத்தில் உள்ள பஞ்ச்குலா அரசு விருந்தினர் இல்லத்தில் தங்க வைத்துள்ளனர். மேலும் அந்த இல்லம் மூடப்பட்டு உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை. மாநிலங்களவை எம்.பி. தேர்தலின் போது தேர்தல் அலுவலர்களை பா.ஜ.க.வினர் மிரட்டினர் என காங்கிரஸ்  புகார் கூறி உள்ளது.இந்நிலையில் இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க. சதி செய்வதாக அம்மாநில முதல்வர் சுக்வீர்சிங் சுகு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த நிலையில் இமாசல பிரதேச சட்டசபை இன்று கூடியபோது, எதிர்க்கட்சியாக உள்ள பா.ஜ.க. உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமரும்படி சபாநாயகர் கூறினார். ஆனால், அவர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில், கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதுடன், சபாநாயகர் அறையில் தவறாக நடந்து கொண்டதற்காக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 15 பேரை சஸ்பெண்டு செய்து சபாநாயகர் அதிரடி உத்தரவை பிறப்பித்தார். அவர்கள் அவையில் இருந்தும் வெளியேற்றப்பட்டனர்.

எதிர்க்கட்சி தலைவர் ஜெய்ராம் தாகூர், விபின் சிங் பார்மர், ரந்தீர் சர்மா, லோகேந்தர் குமார், வினோத் குமார், ஹன்ஸ் ராஜ், ஜனக் ராஜ், பல்பீர் வர்மா, திரிலோக் ஜம்வால், சுரேந்தர் ஷோரி, தீப் ராஜ், பூரன் தாக்கூர், திலீப் தாக்குர் மற்றும் இந்தர் சிங் காந்தி ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் பொது பணித் துறை மந்திரியான விக்ரமாதித்யா சிங் ராஜினாமா செய்தார். இதனால், அரசியல் ஸ்திரமற்ற சூழலை இமாசல பிரதேசம் எதிர்கொண்டு உள்ளது. முதல்-மந்திரிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு கோர கூடிய சூழலில், 15 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இமாச்சலில் காங்கிரஸ் அரசுக்கு ஏற்பட்டுள்ள  ெ நருக்கடியை தொடர்ந்து அங்கு  கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார், மற்றும் அரியானா முன்னாள் முதல்வர்  ஆகியோர்   கொண்ட  காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் இமாச்சல் வி்ரைந்துள்ளனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!