தமிழ்நாடு சோழமண்டல மருத்துவர் முடி திருத்துவோர் சமூக நல சங்க மாநில செயற்குழு கூட்டம் தஞ்சாவூரில் நடந்தது. மாநிலத் தலைவர் எம்.பெல்மாறன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் டிஎஸ்ஆர் முருகதாஸ், மாநிலத் துணைத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் டீலக்ஸ் ஜெயபால் ஆண்டறிக்கை வாசித்தார்.
கூட்டத்தில் முடி திருத்தும் தொழிலாளர் நல வாரியத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் 80 வயது கடந்த மூத்த உறுப்பினர்களுக்கு நல வாரியத்தின் வாயிலாக மாத ஓய்வூதியம் கிடைப்பது மிகவும் தாமதமாகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அரசை கேட்டுக் கொள்வது. முடி திருத்தும் தொழிலாளர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் தனி இட ஒதுக்கீடு ஐந்து சதவீதம் வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்துவது, மருத்துவர் சமுதாயத்திற்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும். முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களில் சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும். கடும் விலைவாசி உயர்வை முன்னிட்டு நீண்ட ஆண்டுகளாக முடித்தும் கட்டணத்தை உயர்த்தவில்லை தற்பொழுது வரும் மார்ச் மாதம் முடி திருத்தும் கட்டணம் உயர்த்துவது என் மனம் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில அவைத்தலைவர் பூபதி, சட்ட ஆலோசகர் இளம்பரிதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.