தஞ்சை மாவட்டம், பாபநாசம், அரையபுரம் தட்டுமால் படுகையில் சாகுபடி செய்து வரும் 400 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 1999 உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பேரில் ரயத்து வாரியாக மாற்றம் செய்து பட்டா வழங்க வலியுறுத்தி பாபநாசம் அரசலாறு முனீஸ்வரர் கோயில் அருகில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது. நேற்று 3 வது நாளாக நடந்த காத்திருப்பு போராட்டத்தில் சாமு.தர்மராஜன், ஏ.ஐ.டி.யூ.சி. மாநிலச் செயலர் தில்லைவனம், சிபிஐ ஒன்றியச் செயலர் சேகர் உட்பட ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில் வருவாய்த் துறை முயற்சித்தும், சிலரது தலையீட்டால் பட்டா வழங்கப் படவில்லை. தமிழக அரசு எங்களது கோரிக்கையை ஏற்கா விட்டால் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் என்றனர்.