திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பல திட்டங்களை தொடங்கி வைத்ததுடன், ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் இந்திய வீரர்கள் 4 பேரும் பங்கேற்றனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:
குரூப் கேப்டன் பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப், சுபான்சு சுக்லா. மேற்கண்ட 4 வீரர்களுடன் பிரதமர் மோடி கைகுலுக்கி அவர்களுடன் உரையாடி, இவர்கள் 4 பேரும் வெண்வெளிக்கு செல்ல உள்ள இந்திய வீரர்கள் என அறிமுகப்படுத்தினார். இவர்கள் கடந்த 6 வருடங்களாக ரஷ்யாவில் விண்வெளி பயணத்துக்கான பயிற்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 4 வீரர்களுக்கும் விண்வெளி பயணத்துக்கான மிஷன் லோகோவை பிரதமர் வழங்கினார். இவர்கள் விண்வெளியில் 3 நாள் தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்வார்கள்.
இந்த விழாவில் பேசிய பி்ரதமர் மோடி, விண்வெளியில் இந்தியாவின் புதிய சகாப்தம் தொடங்கி உள்ளது என்றார்.