அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே ஏலாக்குறிச்சி கிராமத்தில் அரசு மாதிரி மேல்நிலைபள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்… அந்த மனுவில் அப்பள்ளியில் பத்து ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஆங்கில ஆசிரியை இளவரசி என்பவர் அனைத்து மாணவர்கள் மீதும் அக்கறையாகவும், அனைத்து தேர்விலும் வெற்றிபெறும் வகையில் பணியாற்றி வந்ததாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில் அவர்மீது யாரோ சிலர் பொய் புகார் கூறிய நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யபட்டு உள்ளதாகவும், எனவே அவரை மீண்டும் தங்களது பள்ளியில் பணியில் சேர்த்து மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக மாற்றிட வழிவகை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து மனுவை பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணாவிடம் மாணவர்களின் பெற்றோர்கள் வழங்கியுள்ளனர்.
ஆங்கில ஆசிரியர் மீண்டும் எங்களுக்கு வேண்டும்…. கலெக்டரிடம் பெற்றோர்கள் மனு..
- by Authour
