திராவிட மாடல் அரசின் இரண்டரை ஆண்டு சாதனைகளை குறித்து இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் தின்னை பிரச்சாரத்தை துவக்கி வைத்தார் தமிழக பள்ளிகலவிதுறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி திராவிட முன்னேற்ற கழகமானது பல்வேறு பிரச்சாரங்களை தொடர்ந்து நடத்தி வரும் நிலையில் திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவின் படி இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் தின்னை பிரச்சாரத்தை திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்ரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவெறும்பூர் தெற்கு ஒன்றியத்தை சார்ந்த காந்தளூர் ஊராட்சி பகுதியில் துவக்கி வைத்தார்.
தமிழக அரசின் இரண்டரை ஆண்டு சாதனைகளை குறித்து வீடு வீடாக அமர்ந்து பொதுமக்களிடம் எடுத்துரைத்ததுடன் வாக்களிக்க இருக்கும் பெண்மணிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே பாஜக அரசுக்கு ஏன் வாக்களிக்க கூடாது என்றும் மேலும் தமிழகத்தில் பாஜக எந்த வகையான பாசிச அரசியலை திணித்து வருகிறது என்றும். எனவே திராவிட மாடல் நாயகர் தமிழக முதல்வர் அவர்களின் பொற்கால ஆட்சியில் அமையும் கூட்டணிக்கு நாம் அனைவரும் வாக்களித்து மத்தியில் பாசிச பிஜேபி ஆட்சியை அகற்ற வேண்டும் என எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர் சீ.கா மறைமலை கழக நிர்வாகிகள் கயல்விழி, ஜெகதீசன், மாரிமுத்து, மற்றும் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்