புதுக்கோட்டைவடக்கு, தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் புதுக்கோட்டையில்கற்பகவினாயகர்திருமணமண்டத்தில் நடைபெற்றது. கூட்டத்தில்தெற்குமாவட்டசெயலாளரும்,சட்டத்துறை அமைச்சருமான எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்சிவ.வீ.மெய்யநாதன், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, கழக மாநில இலக்கிய அணி துணைத்தலைவர்கவிதைப்பித்தன், வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் அரு.வீரமணி,கழக வழக்கறிஞர் சி.ராமநாதன், நகரசெயலாளர்ஆ.செந்தில்,இளைஞர்அணிஅமைப்பாளர்சண்முகம் மற்றும் தென்னலூர்பழனியப்பன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்று உரையாற்றினார்கள்.
கூட்டத்தில் மார்ச்1ல் பிறந்தநாள் காணும் கழகத்தலைவர், முதலமைச்சர் முக.ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.