திருச்சி மேலக்கல்கண்டார்க் கோட்டை விவேகானந்தர் நகர் ரயில்வே சுரங்கப்பாதை, பொன்மலை நார்த் டி ரயில்வே கேட் சுரங்கப்பாதை திறப்பு விழாக்கள் மற்றும் மஞ்சத்திடல் ரயில் நிலையத்திற்கு இடையே புதிய மேம்பாலத்திற்கான அடிக்கல் நாட்டும்பணி ஆகியவை இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வீடியோகான்பிரன்சிங்கில் கலந்து கொள்கிறார். இவ்விழாவிற்காக ரயில்வே அதிகாரிகள் அவசர அவசரமாக பணிகள் மேற்கொண்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக விவேகானந்தர் நகர் ரயில்வே சுரங்கப்பாதை கடந்த இரண்டு வருடமாக கிடப்பில் போடப்பட்டு மெதுவாக பணிகள் நடைபெற்று வந்தன. வேறு வழியில்லாமல் பொதுமக்கள் அவ்வழியினை பயன்படுத்தி வந்தனர். திடீரென நேற்று அப்பாதையை அடைத்த ரயில்வே அதிகாரிகள் பொதுமக்கள் போக்குவரத்திற்கு தடை விதித்ததோடு அவசர அவசரமாக பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். பாதை திடீரென அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும்அவதிக்குளாகினர்.