திருச்சி பாராளுமன்ற தொகுதி எம்பியாக இருப்பவர் காங்கிரஸ் முன்னாள் மாநிலத்தலைவர் திருநாவுகரசர். இந்த முறை திருநாவுகரசருக்கு சீட்டு கொடுக்க வேண்டாம் என திமுகவில் ஒரு தரப்பினர் ஆய்வு கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர். திருச்சி காங்கிரசில் ஒரு தரப்பினர் திருநாவுகரசருக்கு சீட்டு கொடுக்க கூடாது என தீர்மானம் போட்டு மேலிடத்தி்ற்கு அனுப்பியிருந்தனர். இந்த நிலையில் திருச்சி பாராளுமன்ற தொகுதி திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறப்பட்டு வந்தன. இந்த நிலையில் தனக்கு சீட்டு இல்லை என்கிற வருதத்தில் இருக்கும் திருநாவுகரசர் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணையப்போவதாக கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நமது etamilnews.comல் அடுத்து விக்கெட் திருநாவுகரசர்..? என்கிற தலைப்பில் செய்தி வெளியானது.. இந்த நிலையி்ல் திருநாவுசரகர் ஆதரவாளரான திருச்சி பிரமுகர்கள் சிலர் திருநாவுகரசர் பாஜகவிற்கு செல்லப்போவதான தகவல் வதந்தி என்றும்.. திருநாவுகரசருக்கு திருச்சி தொகுதி உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் இதற்கான அறிவிப்பு அடுத்த 2 நாட்களில் வெளியாக உள்ளதாக கூறினர்.