கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழகத்தின் 87 வது நிகழ்வாக திருச்சி தெற்கு மாவட்ட மாநகர தோ.மு.சா சார்பாக மாபெரும் மாரத்தான் போட்டி மற்றும் முடி திருத்துவோர் மற்றும் ஆட்டோ ஓட்டுனருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பாக நடைபெற்றது
கலைஞர் நூற்றாண்டு விழாவானது திருச்சி தெற்கு மாவட்ட மாநகர தொ.மு.ச சார்பாக திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் மாபெரும் மாரத்தான் போட்டி மற்றும் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் முடி திருத்துவருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது இந்த விழாவில் தொமுச பொதுச் செயலாளர் கணேஷ் குமார்
அனைவரையும் வரவேற்றார். கூட்டமைப்பு செயலாளர் ஜோசப் நெல்சன் தலைமை வகித்தார்.
மேலும் இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கழகத் துனை பொதுச் செயலாளர் பொன்முடி அவர்கள் மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்ருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொமுச பேரவை பொதுச் செயலாளர் மாநிலங்களவை உறுப்பினருமான சண்முகம் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் மராத்தான் போட்டியில் எட்டு முதல் 18 வயது வரை உள்ள மாணவ மாணவிகள் மற்றும் 12 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவ மாணவர்களும் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டோர் பல்வேறு பிரிவுகளில் சுமார் 600க்கும் மேற்பட்டோர் போட்டியில் கலந்து கொண்டனர்.
மேலும் இதனை அடுத்து முடி திருத்துவோர் சுமார் 400 பேருக்கு மளிகை பொருட்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சுமார் 500 பேருக்கு மளிகை பொருட்கள் ஆகியவற்றை கழக துணைப் பொதுச் செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் பேசுகையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவில் தொமுச பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றும் மேலும் தொமுச நிறுவுவதற்கு கலைஞர் அரும்பாடு பட்டதாகவும் முதன்முதலில் தொழிற்சங்க ஊழியர்களுக்கு விடுப்புடன் ஊதியத்தையும் வழங்கியவர் முத்தமிழர் கலைஞர் தான் என்றும் எனவே இந்த நிகழ்ச்சி கொண்டாடுவதில் தோ.மு.சாவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் இந்த விழாவிற்கு வந்திருக்கும் பொன்முடி அவர்களை வரவேற்பதாகவும் கூறினார். மேலும் இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் முன்னோடிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.