இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சரிபோதா சனிவாரம்’ திரைப்படத்தில் நானி நாயகனாக நடிக்க, நெகடிவ் ரோலில் எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார். இந்த படத்தை டி.வி.வி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில், நானியின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். க்ளிம்ப்ஸ் வீடியோ ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது, இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி கன்னடம் ஆகிய மொழியில் வெளியாகவுள்ளது.
தமிழில் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ (SURYA’S SATURDAY ) என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான நானியின் ‘ஹாய் நான்னா’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால், அவரது அடுத்த படமான இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படம் ஆகஸ்ட் 29ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.