Skip to content
Home » மயிலாடுதுறை வித்யாம்பிகை சமேத சுவேதாரனேஸ்வரர் கோவில் தீர்த்தவாரி..

மயிலாடுதுறை வித்யாம்பிகை சமேத சுவேதாரனேஸ்வரர் கோவில் தீர்த்தவாரி..

மாசி மகம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார் காவிரி சங்கம தீர்த்தத்தில் நவகிரகங்களில் புதன் ஸ்தலமாக விளங்கும் திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரனேஸ்வரர் கோவிலில் கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் இந்திர விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 4ம் நாள் திருவிழாவான இன்று காவிரி சங்கமத்தில் சுவேதாரண்ய சுவாமி அம்பாள் ,அஸ்தி தேவர் எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவிலில் இருந்து சுவாமி, அம்பாள், அஸ்தி தேவர் வீதியுலாவாக பூம்புகார் காவிரி சங்கமத்துறைக்கு எழுந்தருளினர். அங்கு அஸ்திர தேவருக்கு வாசனை திரவியபொடி, பால், தயிர், தேன் ,சர்க்கரை, மஞ்சள் பொடி, சந்தனம், பன்னீர் ஆகியவை உள்ளிட்ட 11 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அஸ்திரதேவர் கடலில் தீர்த்தம் கொடுக்க அங்கு திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சுவாமி அம்பாளை தரிசித்தனர். தொடர்ந்து சுவாமி அம்பாள் அஸ்திர தேவருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *