முன்னாள் தமிழக முதல்வர், அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அ.ம.மு.க சார்பில் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலையணிவித்து மரியாதைச் செலுத்தப் பட்டது. பாபநாசம் புதிய பேருந்து நிலையம் அருகில் வைக்கப் பட்டிருந்த அவரது படத்திற்கு மாலையணிவித்து மரியாதைச் செலுத்தப் பட்டது. இதில் அ.ம. மு.க மாவட்ட அவைத் தலைவர் ஜெயராமன், ஒன்றியச் செயலர்கள் பாபநாசம் தெற்கு பன்னீர் செல்வம், மேற்கு அன்பழகன், கிழக்கு சரவணபாபு, பேரூர் செயலர்கள் பாபநாசம் பிரேம் நாத் பைரன், அய்யம் பேட்டை சிட்டி பாபு, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலர் குமார், பொதுக் குழு திவாகரன் உட்பட ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். இதேப் போன்று அ.தி.மு.க ஓ.பி.எஸ் பிரிவு சார்பில் பாபநாசத்தில் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலையணிவித்து மரியாதைச் செலுத்தப் பட்டது. இதில் பேரூர் செயலர்கள் பாபநாசம் கலை நிதி, அய்யம் பேட்டை இப்ராகிம், ஒன்றியச் செயலர்கள் பாபநாசம் கிழக்கு ஆதனூர் குமார், மேற்கு பசுவை முத்து, அம்மாபேட்டை வடக்கு பக்கிரி சாமி, தெற்கு குணசேகரன், பொதுக் குழு ராஜ கோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.