திருச்சி கோட்டை பகுதியில், ராஜஸ்தானில் இருந்து காரில் கடத்திவரப்பட்ட தடைசெய்யப்பட்ட குட்கா-புகையிலை பொருட்கள் 62 மூட்டைகள் பறிமுதல். ராஜஸ்தானை சேர்ந்த சுனில் குமார் (வயது 23) என்பவரை கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் கைது செய்து, அவரிடமிருந்த மூன்று லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடமிருந்து (சொகுசு காரான) கிரீட்டா காரையும் பறிமுதல் செய்தனர்.