முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளையொட்டி திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் பெல் தொழிற்சங்க வாயில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் ப.குமார் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து பொதுமக்களும் காலை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட, கிளை கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.