ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேசன் குற்றப் பிரிவில் பணியாற்றி வந்தவர் விநாயகமூர்த்தி. இவர் ஸ்ரீரங்கம் காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் வீட்டில் இருந்த போது மயக்கம் வருவது போல் கூறியுள்ளார். உடனே அவரது மனைவி 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த மருத்துவர்கள் விநாயகமூர்த்தியை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.