தமிழ்நாட்டில் இன்று மூன்று ஐ.பி.எஸ்.அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
1) தமிழ்நாடு நுண்ணறிவு பிரிவு டிஐஜியாக பணியாற்றி வரும் மகேஷிற்கு கூடுதலாக தீவிரவாத தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி. பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது
2) சென்னை சி.ஐ.டி. எஸ்.பியாக பணியாற்றி வந்த அருளரசுக்கு கூடுதலாக தீவிரவாத தடுப்பு பிரிவு தலைமை அலுவலக எஸ்.பி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
3) கோயம்புத்தூர் தீவிரவாத தடுப்பு எஸ்பியாக பணியாற்றி வந்த சசிமோகனுக்கு கூடுதலாக மதுரை தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி. பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ளார்.