விளைப்பொருட்களுக்கு ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்டத்திருத்த மசோதா ரத்து, விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாமல் இருக்க, எல்லையில் தடுப்புகள் போடப்படும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
டில்லிக்கு நுழைய முயன்ற விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்து வருகின்றனர் இந்நிலையில் நேற்று முன்தினம் ரப்பர் குண்டில் அடிபட்டு விவசாயி உயிர் இழந்தார் இதனை கண்டிக்கும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்
இந்நிலையில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தும் மத்திய அரசை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அயிலை சிவசூரியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் தோழமைக் கட்சியை சார்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்.