Skip to content

நாகையில் மாரத்தான் விழிப்புணர்வு போட்டி…5 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்பு

  • by Authour

நெகிழி இல்லா கடற்கரை மண்டலத்தை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று நாகையில் மாரத்தான் ஓட்ட பந்தய போட்டி நடைபெற்றது. மாசி மகத்தை முன்னிட்டு அக்கரைப்பேட்டை கிராமம் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியினை, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், எம்.எல்.ஏ, நாகை,மாலி ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர். ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்கிய மாரத்தான் போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் என சுமார் 5, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்து

கொண்டனர், ஆடவர்,மகளிர் என நான்கு பிரிவுகளாக 7, கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இப்போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்ற பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் சளைக்காமல் உற்சாகத்துடன் ஓடி வந்தனர். போட்டியில் பங்கேற்ற வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பொதுமக்கள் கைதட்டி அவர்களை வரவேற்று ஊக்கப்படுத்தினார். மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும், பரிசு மற்றும் சான்றிதழ் கேடயங்களை அக்கரைப்பேட்டை கிராமத்தினர் வழங்கி பாராட்டினர்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *