தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் எம்.எல்.ஏ .லஸ்ய நந்திதா(36). இவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரது கார் விபத்துக்குள்ளானது. இதில் நந்திதா மரணம் அடைந்தார். டிரைவர் மற்றும் எம்.எல்.ஏ.வின் உதவியாளர் காயமடைந்தனர். இது குறித்து சுல்தான்பூர் போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த பொதுத் தேர்தலில் நந்திதா 59,057 வாக்குகள் பெற்று , செகந்திராபாத் கண்டோன்மெண்ட் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர் ஆவார். அவரது மறைவுக்கு முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் தெலங்கானாவின் அனைத்து கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.