திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களுக்கு தீவிர வசூல் பணி நடைபெற்று வருகிறது.
2023 – 2024 ஆம்ஆண்டு முடிய செலுத்த வேண்டிய சொத்து வரி ,குடிநீர் கட்டணம், காலி மனை வரி புதை வடிகால் சேவை கட்டணம் தொழில் வரி மற்றும் வரியில்லா இனங்கள் (கடை வாடகைகள்) உடனடியாக செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் மாநகராட்சி வார்டு குழு அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வரி வசூல் மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி வார்டு குழு அலுவலகங்களில் உள்ள வரி வசூல் மையங்கள் பொதுமக்களின் வசதிக்காகவும் தற்போது கோடை கால மாதங்களில் மிகவும் தட்பவெப்ப நிலை மற்றும் பொதுமக்களின் அன்றாட பணி நேரத்தினை கருத்தில் கொண்டு பொதுமக்களின் வசதிக்காக வரி வசூல் மையங்களின் பணி நேரத்தினை காலை 8மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.என தெரிவிக்கப்படுகிறது. எனவே பொதுமக்களை வாய்ப்பினை பயன்படுத்தி காலை மற்றும் மாலை வேலையிலும் தங்களுக்கான வரியினை நிலுவையின்றி செலுத்த பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.என திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார்.