கோடைகாலம் தொடங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தற்போது பனியின் தாக்கம் குறைந்து வருவதால் வெயில் சுட்டெரித்து வருகிறது. தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று மக்கள் அச்சப்படுகின்றனர்.
மேலும் உடல் வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் பழஜூஸ், கரும்புச்சாறு, குளிர்பானங்கள், கூழ் போன்றவற்றை வாங்கி அருந்தி வருகிறார்கள். கிலோ ரூ.25க்கு சத்து நிறைந்த தர்ப்பூசணி விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இளநீர், வெள்ளரிக்காய் ஆகியவற்றை மக்கள் வாங்கி சாப்பிடுகிறார்கள்.
குறிப்பாக அதிக நீர்ச்சத்து கொண்ட தர்ப்பூசணி பழத்தை சிறுவர்கள், முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதன் காரணமாக தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் தர்ப்பூசணி பழங்கள் குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய் யப்பட்டு வருகிறது. தற்போது சீசன் தொடங்கி இருப்பதால் தஞ்சைக்கு அதிக அளவில் தர்ப்பூசணி பழங்கள் விற்பனைக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளது.