சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க கோவை மாநகர காவல்துறை சார்பாக காவல்துறையினர் இருசக்கர வாகனம், ஜீப், வேன் ஆகிய வாகனங்களை ரோந்து பணிகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.. இந்நிலையில்,மக்கள் நெருக்கம் அதிகம் நிறைந்த பகுதிகளில்,,பெரிய வாகனங்கள் செல்ல முடியாத இடங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு கண்காணிக்க வசதியாக, பேட்டரியால் இயங்கக்கூடிய ஆட்டோ வகை ரோந்து வாகனம் அண்மையில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.இந்நிலையில் இந்த வாகனங்களின் பயன்பாடு அதிகரித்த நிலையில், சிட்டி யூனியன் வங்கி,ஆனைமலைஸ் குழுமம், மற்றும் மஹாசக்தி ஆட்டோ ஏஜன்சி ஆகிய நிறுவனங்களின் சி.எஸ்.ஆர்.நிதியில் இருந்து,கோவை மாநகர காவல் துறைக்கு கூடுதலாக ஐந்து ரோந்து ஆட்டோக்கள் வழங்கப்பட்டது..இதற்கான துவக்க நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல்துறை ஆணையர் கலந்து புதிய ரோந்து வாகனங்களை கொடியசைத்து துவக்கி
வைத்தார்..இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ மஹாசக்தி ஆட்டோ ஏஜன்சியின் நிர்வாக இயக்குனர் தனசேகர்,துணை தலைவர் ராம்பிரசாத்,சிட்டி யூனியன் வங்கி முதன்மை மேலாளர் ஸ்ரீராம்,ஆனைமலைஸ் டொயோட்டா நிர்வாக இயக்குனர் விக்னேஷ், ஆல்ட்டி க்ரீன் மண்டல தலைமை விற்பனை மேலாளர் நிர்மல் ஆகியோர் கலந்து கொண்டனர்..நிகழ்ச்சியில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்டோவில் சென்றவாறு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள், உள்ளே அமர்ந்து மைக் மூலம் ஒலி பெருக்கி வாயிலாக எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிடுவதற்கு, இந்த ஆட்டோவில் சைரன்,எச்சரிக்கை ஒலிப் பெருக்கி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.தற்போது இந்த வாகனங்கள் ஐந்து காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக கூறிய அவர்,படிப்படியாக இதன் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தெரிவித்தார்..