Skip to content

பொன்மலை ரயில்வே மருத்துவமனை முன் டி.ஆர்.இ.யூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்னக ரயில்வே முழுவதிலும் உள்ள ரயில்வே மருத்துவமனைகளில் 2019 ஆம் ஆண்டு
ஆர்ஆர்சி தேர்வாணையம் மூலம் ஒப்பந்த முறையில் பணியில் அமர்த்தப்பட்ட ஹவுஸ் கீப்பிங், அசிஸ்டன்ட் பணியாளர்கள் கொரோனா காலத்தில் நோய் தொற்று காலத்தில் தங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் அர்ப்பணிப்போடு பணியாற்றிய 202 ஊழியர்களை எவ்வித முன்னறிவிப்புமின்றி பணிநீக்கம் செய்தது,
ரயில்வே மருத்துவமனைகளில் சுகாதாரப் பணியாளர்கள் இல்லாத காரணத்தால் மருத்துவமனை சுகாதார சீர்கேடு ஆகி நோயாளிகள் படும் அவஸ்தைகள் மற்றும் பணியாளர்கள் இல்லாத காரணத்தால் நோயாளிகளை வலு கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்வது, அறுவை சிகிச்சை தள்ளி போடும் அவல நிலையை கண்டித்தும்
நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் பணிநீக்கம் செய்த பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தியும்
டி.ஆர்.இ.யூ சார்பில் வியாழனன்று பொன்மலை ரயில்வே மருத்துவமனை முன் கண்டன
ஆர்ப்பாட்டம். நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு  டி.ஆர்.இ.யூ கோட்டத் தலைவர் சிவக்குமார். தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் டிஆர்இயூ பென்சனர் சங்க வெங்கடேசன், டிஆர்இயூ திருச்சி கோட்ட செயலாளர் கரிகாலன்,
துணை பொதுச் செயலாளர் சரவணன், சி.ஐ.டி.யு மாவட்ட துணை தலைவர் மணிமாறன், பொன்மலை ஒர்க் ஷாப் டிவிசன் தலைவர் லெனின் ஆகியோர் கண்டன உரையாற்றினார். முடிவில் பொன்மலை ஓபன் லைன்கிளை செயலாளர் கவியரசன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *