சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக நிபுணர் பணியிடங்களுக்கான நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டார். தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ள 332 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அரசு டாக்டர்கள் நியமிக்கப்படும் இடங்களில் உரிய நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை, பணிக்காலங்களின் போது முழு ஈடுபாட்டுடன் இருப்பதில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், அமைச்சர் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.