மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சிக்குட்பட்ட உத்திர தெற்கு வீதியில் உள்ள குடியிருப்பு வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தூய்மை பணியாளர்களுக்கு பிரித்து வழங்குவதை தமிழ்நாடு முதலமைச்சரின் “உங்களை தேடி உங்கள் ஊரில் ” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உத்திர தெற்கு வீதி குடியிருப்பிலிருந்து விடியற்காலையில் கோலம் போட வெளியே வந்த பெண் வாசலில் அதிகாரிகள் புடைசூழ மாவட்ட ஆட்சியரை பார்த்து ஆச்சரியப்பட்டார், மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து வழங்குகிறீர்களா என கேட்டார்.
உடன் கூடுதல் ஆட்சியர் ஷபீர் ஆலம், மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை , மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.வ.யுரேகா, குத்தாலம் பேரூராட்சி தலைவர் சங்கீதா மாரியப்பன், குத்தாலம் பேரூராட்சி துணைத் தலைவர் .சம்சுதின் குத்தாலம் பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் அவர்கள் உள்ளனர்.