“உங்களைத்தேடிஉங்கள்ஊரில்” என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் அறிமுகம் செய்துள்ளார். இந்த திட்டத்தின்படி மாதத்தில் ஒரு நாள் கலெக்டர்கள் ஒரு கிராமத்திற்கு சென்று அங்கு தங்கியிருந்து மக்களின் பிரச்னைகளை நேரில் அறிய வேண்டும் என்பதாகும். கடந்த மாதம் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. 2வது மாதமாக இன்று அனைத்து கலெக்டர்களும் கிராமங்களில் ஆய்வு செய்து வருகிறார்கள்.
அதன்படி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சிரம்யா இன்று அறந்தாங்கிக்கு சென்றார். காலையில் அவர் அங்குள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார். அப்போது அவர் ஒரு வகுப்பைறைக்கு சென்று ஆசிரியை பாடம் நடத்துவதை ஆய்வு செய்தார்.
இதுபோல அறந்தாங்கி அருகே உள்ள வாழக்குடியிருப்பு அங்கன்வாடி மையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நூலகம் ஆகியவற்றையும் கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அறந்தாங்கி கோட்டாட்சியர் சிவக்குமார், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) சோபா ஆகியோரும் சென்றிருந்தனர்.