நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் மார்ச் 2வது வாரத்தில் வெளியாகும் என தெரிகிறது. இந்த நிலையில் தோல்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமைை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மாநிலங்கள் தோறும் சென்று ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் அவர் இன்று இரவு சென்னை வருகிறார். அவருடன் துணை தேர்தல் ஆணையர்களும் வருகிறார்கள். அவர்கள் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை சென்னையில் முகாமிட்டு தேர்தல் அதிகாரிகள், கலெக்டர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோரிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்துகிறார்.