குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தேசிய மாவட்டங்களுக்கு இடையேயான இளையோருக்கான தடகளப் போட்டி – 2024 (நிட்ஜாம்) சென்ற 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 3 நாட்கள் நடைப்பெற்றது.
இதில் திருச்சி மாவட்டத்தில் ஐனவரி 17ம் தேதி திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் நடந்த போட்டியில் இருந்து 13 வீரர்- வீராங்கனைகள் தேர்ந்ததெடுக்கப்பட்டு அவர்கள் (12.02.24) அன்று திருச்சி மாவட்ட தடகள சங்க செயலர் ராஜூ, பொருளாளர் ரவிசங்கர், உதவி செயலாளர் கனகராஜ், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் நீலமேகம், பயிற்சியாளர்கள் திருச்சி இருந்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள்.
இந்த தடகள போட்டியில் இந்திய முழுவதும் உள்ள சுமார் 600 மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனைகள் கலந்து கொண்டனர். சாம்பியன்ஷிப்பில் தடை தாண்டுதல், வட்டு எறிதல், உயரம் தாண்டுதல், டிரையத்லான், ஈட்டி எறிதல் போன்ற விளையாட்டுகளில் .3 நாட்கள் நடைப்பெற்றது.
இதில் 16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் பெண்டாத்தளன் எனும் போட்டியில் கலந்து கொண்ட திருச்சி விளையாட்டு விடுதியை சேர்ந்த மாணவன் அகத்தியன் என்பவர் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். பதக்கம் வென்ற வீரர் அகத்தியன் அவரை இன்று 21.02.24 காலை திருச்சி ரயில்வே நிலையத்தில் திருச்சி மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக துணை செயலாளர் கனகராஜ், சீனியர் சுரேஷ்பாபு, தம்பிராஜ், ஆரோக்கியராஜ், பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் என அனைவரும் வரவேற்று சிறப்பித்தனர்.