Skip to content
Home » குண்டு வீசிய வழக்கில் 11 பேர் மீதான வழக்கு…மதுரையிலிருந்து கரூர் கோர்ட்டிற்கு மாற்றம்…

குண்டு வீசிய வழக்கில் 11 பேர் மீதான வழக்கு…மதுரையிலிருந்து கரூர் கோர்ட்டிற்கு மாற்றம்…

  • by Senthil

மதுரை மாவட்டம், அவனியாபுரம் அருகே கடந்த 2012 ஆம் ஆண்டு குண்டு வீசிய வழக்கில் தொடர்புடைய 11 பேர் மீதான வழக்கு பாதுகாப்பு காரணத்திற்காக, மதுரையில் இருந்து கரூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

2 நாட்கள் முன்பு இந்த வழக்கில் உள்ள குற்றவாளிகள் விசாரணைக்கு கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகியதாக கூறப்படுகிறது, அதனைத் தொடர்ந்து குற்றவாளி ராமர் என்ற ராமபண்டியன் மற்றும் கார்த்தி என்பவர் இருசக்கர வாகனத்தில் கரூர் – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வந்துள்ளனர். அப்போது அரவக்குறிச்சி அடுத்த தடாகோவில் பிரிவு சாலை அருகே காரில் வந்த மர்ம கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரையும் கொடூரமாக அறிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலில் ராமர் என்ற ராமர்பண்டியன் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கார்த்தி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, போலீசார் மூலம் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ராமர் பாண்டியர் கொலை வழக்கு தொடர்புடைய நபர்களை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்க முடியும் என அவரது உறவினர்கள் ஆதரவாளர்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். மேலும் மூன்றாவது நாளான இன்றும் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து கொலையாளியை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஐந்து நபர்கள் சரன் அடைத்துள்ளார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தொடர்ந்து போலீஸிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வழக்கின் முழு தன்மையை தெரிவிக்கவும் என ராமர் பாண்டியனின் ஆதரவாளர்கள் கூறிக் கொண்டு தொடர்ந்து பேச்சு வார்த்தை ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 3வது நாளாக உடல் கரூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது தற்போது வரை உடல் பிரோத பரிசோதனை செய்யப்படவில்லை நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வருகின்றனர் ராமர் பாண்டியன் ஆதரவாளர்கள் உறவினர்கள் என 500க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன் காந்திகிராம மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகை புரிந்து உள்ளார். மேலும் ராமர் பாண்டியனின் தந்தையிடம் சம்பவம் குறித்து கேட்டு விசரித்து விட்டு. தொடர்ந்து வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாளுடனும் , காவல்துறையில் இருந்தும் தற்போது நிலை குறித்து கேட்டறிந்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!