தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது. ஒன்றியக்குழு உறுப்பினர் ஜார்ஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன் , பாபநாசம் மாவட்ட குழு உறுப்பினர் காதர் உசேன், பாபநாசம் ஒன்றிய செயலாளர் முரளிதரன், பாபநாசம் நகர செயலாளர் சங்கர் மற்றும் பலர் பேசினர். கூட்டத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரிப்பது, பாபநாசம்- அய்யம்பேட்டை பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெறும் மழை நீர் வடிகால் பணியினை விரைந்து முடிக்க கேட்டுக் கொள்வது, அய்யம்பேட்டை மதகடி பஜார் பகுதியில் சிறு பாலம் கட்டுமான பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.