அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள விளந்தை பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து(55).
கூலி தொழிலாளியான இவருக்கு அதிக குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் அடிக்கடி குடித்துவிட்டு குடிபோதையில் வீட்டில் உள்ளவர்களுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி இரவு சுமார் 7 மணி அளவில் வழக்கம் போல் மாரிமுத்து குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.போதை தலைக்கேறி நிலையில் மாரிமுத்து அவரது மனைவிபை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் வலி பொறுக்க முடியாத மாரிமுத்துவின் மனைவி சித்ரா (48) மாரிமுத்துவின் கையில் வைத்திருந்த விறகு கட்டையை பிடுங்கி மாரிமுத்துவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் எதிர்பாராத விதமாக மாரிமுத்துவின் தலையில் பலத்த காயம் அடைந்து மயங்கி கீழே விழுந்துள்ளார் இதை எடுத்து மனைவியே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்று. அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல். சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து ஆண்டிமடம் போலீசார் சம்பவத்தன்று மாரிமுத்துவின் மனைவி சித்ரா மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து இந்த நிலையில் மாரிமுத்து இன்று இறந்த நிலையில் சித்ரா மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
