முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா 76வது பிறந்த நாள் வரும் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளரும் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமான ஏவிகே அசோக்குமார் தலைமை வகித்தார்.
இதில் மாவட்ட செயலாளர் பாரதிமோகன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:
வரும் 24ம் தேதி அம்மா பிறந்த நாள் அன்று ஜெயலலிதாவின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். கண் தானம், ரத்த தானம் செய்தல், மருத்துவ முகாம் நடத்துதல், கவிதை போட்டி, கட்டுரைப் போட்டி, கோலப்போட்டி, விளையாட்டுப் போட்டிகளை நடத்துதல், கல்வி உபகரணங்களை வழங்குதல் என விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் எனகேட்டுக்கொண்டார்.
அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட மகளிர் அணி தலைவர் தமிழ்செல்வி வீரமுத்து, மீனவர் பிரிவு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய பொருளாளர் ரவி, அம்மா பேரவை செயலாளர் தங்க நடராஜன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் பங்கு சேகர் மற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.